காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் | மாதம்பட்டி ரங்கராஜ் கொஞ்சி பேசும் வீடியோவை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா | அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு |
ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயகர்களாக நடிக்க, ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'லால் சலாம்'. படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தோல்விப் படமாகவே அமைந்தது.
படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்' காணாமல் போனதே அதற்குக் காரணம் என்றும் சொன்னார்கள். அதன்பின் படம் ஓடிடியில் நான்கு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வெளியாகவில்லை.
ஓடிடியில் வாங்குவதற்கு யாருமே முன் வரவில்லை என்று முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின் சில ஓடிடி நிறுவனங்களில் படம் வெளிவரும் என்றும் தகவல் வந்தது. ஆனாலும், அவை எதுவுமே நடக்கவில்லை. ஒரு வழியாக தற்போது படத்தின் ஓடிடி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் 'இருட்டடிக்கப்பட்ட' ரஜினிகாந்த் உருவத்துடன் குட்டி வீடியோ மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓடிடியில் வெளிவரும் போது காணாமல் போன ஹார்ட் டிஸ்க்கில் இருந்த காட்சிகளையும் சேர்த்து வெளியிட உள்ளதாக ஒரு தகவல் இருந்தது. அதன்படி இருக்குமா என்பது படம் வந்த பிறகே தெரியும்.