ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி சீனியர் நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. அவ்வப்போது தமிழிலும் நடிப்பார். தற்போது 'குபேரா, கூலி' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த அமலாவைக் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நாகார்ஜுனா. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் அமலா. அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க கடந்த சில வருடங்களாகவே முயற்சித்து வருகிறார் அகில். திருமண வயதில் உள்ளவர் ஜைனாப் ரவ்ட்ஜி என்ற பெண்ணைக் காதலித்து வந்தார் அகில். அவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
வரும் ஜுன் 6ம் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொள்ள தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளனர் நாகார்ஜுனா அமலா. உடன் மணப்பெண்ணின் பெற்றோரும் சென்றுள்ளனர்.
நாளை சென்னையில் தனுஷ், நாகார்ஜுனா நடித்து ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ள 'குபேரா' படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. திருமண வேலைகள் காரணமாக நாகார்ஜுனா அதில் கலந்து கொள்வது சந்தேகம் என்கிறார்கள். ஒருவேளை இங்குள்ள முக்கிய சினிமா பிரபலங்களை அழைப்பதற்காக வந்து அப்படியே நிகழ்விலும் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.