தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது படத்தின் பாடல்கள் மேடையில் பாடப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன், பின்னனிப் பாடகி சின்மயி உள்ளிடோர் மேடையில் பாடினார்கள்.
படத்தில் பிரபல பாடகியான தீ பாடிய 'முத்த மழை' என்ற பாடலை சின்மயி பாடினார். அன்றைய தினம் பாடகி தீ வர முடியாத காரணத்தால் சின்மயியைப் பாட வைத்துள்ளார்கள். அப்பாடலை தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் சின்மயி தான் பாடியுள்ளார்.
இசை வெளியீட்டின் போது மேடை நிகழ்ச்சியில் சின்மயி பாடிய பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. அவர் பாடியதும் நன்றாக இருக்கிறது, அவரையே பாட வைத்திருக்கலாமே என்ற ரீதியில் கமெண்ட்கள் வந்தது. தமிழில் ஒரிஜனலாகப் பாடிய தீ-யை குறைத்து மதிப்பிடுவது போலவும் ஒப்பிட்ட பல கமெண்ட்கள் வந்தன. தமிழில் பாடலைப் பாடுவதற்கு சின்மயிக்கு தடை விதிக்கப்பட்டதுதான் அதற்குக் காரணம் என்ற சர்ச்சையும் கூடவே எழுந்தது.
இந்நிலையில் இப்படி ஒரு சர்ச்சை தேவையற்று உருவாக்கப்படுவதாக மணிரத்னம் கோபப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே, கர்நாடகாவில் கமல் பேசிய பேச்சால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த சர்ச்சையையும் எதற்கு என அவர் கேட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.




