பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

கமல்ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதனை தொடர்ந்து மலையாளத்தில் இயக்குனராகவும் மாறிய அவர் பஹத் பாசிலை வைத்து டேக் ஆப், சி யூ சூன், மாலிக் மற்றும் உயரே உள்ளிட்ட படங்களை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மோகன்லால், மம்முட்டி, பஹத் பாசில், நயன்தாரா என மலையாள சினிமாவில் முன்னனி நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக அவர் பாலிவுட்டில் சல்மான் கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கான ஒன்லைனை சல்மான் கானிடம் அவர் சொல்லிவிட்டதாகவும் அது சல்மான்கானுக்கு பிடித்து விட்டதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்துவிட்டு தன்னிடம் வருமாறு கூறியுள்ளார் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சல்மான் கானின் சகோதரியும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.