ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
கமல்ஹாசன் நடித்துள்ள 'தக் லைப்' படம் வருகிற 5ம் தேதி வெளிவர இருக்கிறது. இதற்கான புரமோசன் பணிகளில் கமல் ஈடுபட்டு வருகிறார். சென்னையில் நடந்த விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய கமல், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று குறிபிட்டார். இதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர் சித்தராமையாவும் எதிர்ப்பு தெரிவித்தார். கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தை திரையிட மாட்டோம் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : கமல்ஹாசன் தமிழ்த் திரைப்படங்களை கடந்து இந்திய அளவிலும், உலக அளவிலும் தனது படைப்புகளின் வாயிலாக தனி முத்திரை பதித்த ஒரு மூத்த கலைஞர். திரைப்படங்களையே தனது சுவாசமாகவும், உணர்வாகவும், உயிராகவும் சுமந்து வாழும் மகத்தான ஒரு படைப்பாளர்.
மதம், இனம், மொழி பேதமின்றி தனது பேரன்பாலும், கலைத்திறனாலும் நிரந்தர இடம் பிடித்தவர் கமல்ஹாசன். அவரது 'ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'ராஜ பார்வை' திரைப்படத்தை ஆழ்ந்த சகோதர பாசத்துடன் முன் நின்று 'கிளாப்' அடித்து துவக்கி வைத்தவர் கன்னட திரை உலகின் ஈடில்லா உச்ச நட்சத்திரமாக திகழ்ந்த பத்மபூஷன், தாதா சாகிப் பால்கே, கர்நாடக ரத்னா, அமரர், ராஜ்குமார் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
கமல்ஹாசன் கன்னட மொழிக்கு எதிரானவர் போன்ற ஒரு மாயத் தோற்றத்தை சித்தரித்து அவதூறு பரப்புவது முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல. சுய ஆதாயங்களுக்காக, குறிப்பிட்ட சிலர் கமல்ஹாசனை கருவியாக பயன்படுத்தி கன்னட - தமிழ் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்ய அனுமதிப்பது மிகத் தவறான முன்னுதாரணமாகவும், வரலாற்றில் ஒரு மாபெரும் கருப்புப் புள்ளியாகவும் நிலைத்து விடக்கூடும். ஒரு மகத்தான கலைஞனுக்கு எதிராகத் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளைத் தடுத்து நிறுத்த முற்பட வேண்டும் என, தமிழ்த் திரையுலகத்தின் சார்பாக 'தென்னிந்திய நடிகர் சங்கம்' பேரன்புடன் கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.