பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ | 2040ல் நடக்கும் ‛ரெட் பிளவர்' கதை | கவின் ஜோடியாக பிரியங்கா மோகன், கொஞ்சம் ஆச்சரியம்தான்… | குட் பேட் அக்லி : 'ஓஎஸ்டி' விரைவில் ரிலீஸ் | 15 நாளில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸ் | 30 ஆண்டுகளுக்குப் பிறகு ‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் மீண்டும் ரஜினியை சந்தித்த நடிகர் தேவன் | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‛புலி முருகன்' இயக்குனருடன் கைகோர்த்த பிரித்விராஜ் |
சில வருடங்களாகவே தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில் மட்டுமல்ல பாடல்களில் கூட ஆங்கில வார்த்தைகளின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கிறது. இது தமிழ் உணர்வாளர்களை மட்டும் சங்கடப்படுத்தவில்லை, தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை சிலாகித்து பாராட்டி வரும் பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப்புக்கு கூட வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கி வரும் மணிரத்னம், தக் லைப் என டைட்டில் வைத்ததும் அந்த படத்தின் பாடல்களில் ஆங்கில சொற்கள் அதிகம் இடம் பிடித்திருப்பதும் குறித்து சமீபத்தில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தக் லைப் பட புரமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னத்திடம் இதுகுறித்து கேட்கப்பட்டபோது, “என்னுடைய பல படங்களின் டைட்டில்கள் தமிழிலேயே இருந்திருக்கின்றன. ஆனால் அது ஒன்றும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. விதிகள் சொல்வது படி தான் போக வேண்டும் என்று அவசியம் இல்லை. இது அனைவருக்குமான மீடியம் என்று நான் நினைக்கிறேன். அது சரியாக இருந்தால் அதன்படி நீங்கள் போகலாம். ஏன் ஒரு தவறான இலக்கணத்துக்குள்ளையே உங்களை அடைத்துக் கொள்கிறீர்கள். ? சில நேரங்களில் சுகர் பேபி போன்ற பாடல் உங்களுக்கு தேவைப்படும். அது சரியானதாக நீங்கள் உணர்ந்தால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எப்போதுமே ஒரு வழி மட்டுமே இல்லை.. இன்னொன்றும் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.