அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க பேசப்பட்டு அதிலிருந்து தீபிகா படுகோனே விலகியதாக செய்திகள் வெளியானது. அவருக்குப் பதிலாக திரிப்தி டிம்ரியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்து அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தார்கள். இருந்தாலும் 'ஸ்பிரிட்' படத்தின் கதையை வெளியிட்டதாக தீபிகா பெயரைக் குறிப்பிட்டாமல் 'டர்ட்டி பி.ஆர். கேம்ஸ்' என சந்தீப் ரெட்டி வங்கா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் தீபிகாவையும், அவரது பி.ஆர் குழுவினரையும்தான் அப்படி கடுமையாக விமர்சித்துள்ளதாக பரபரப்பானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தீபிகா படுகோனே, “உண்மையாகவும், நம்பத் தகுந்ததாகவும் இருப்பதுதான் என்னை சமநிலையில் வைத்துள்ளதாக நான் நினைக்கிறேன். சிக்கலான சூழல் அல்லது கடினமான சூழலை நான் எதிர்கொள்ளும் போதெல்லாம், எனது உள்மன குரலைக் கேட்டு முடிவுகளை எடுப்பேன். எனக்கு நிறைய அமைதியைத் தரும் முடிவில் உறுதியாக நிற்பதுதான் நான் மிகவும் சமநிலையில் இருப்பதாக உணர்கிறேன் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
'ஸ்பிரிட்' படம் ஆரம்பத்திலேயே இப்படி ஒரு சர்சைசையை ஏற்படுத்திவிட்டது. போகப்போக இன்னும் எந்த மாதிரியான சர்ச்சைகள் வரப் போகிறதோ என பிரபாஸ் ரசிகர்களும் தவிப்புடன்தான் இருக்கிறார்கள்.