சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் | பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் புஷ்பா-2 படம் வெளியானபோது ஆந்திராவில் உள்ள சந்தியா திரையரங்கில் முதல் நாள் முதல் ஷோவை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இதன் காரணமாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனை கடுமையாக விமர்சித்ததோடு, தெலுங்கானாவில் நான் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த படங்களுக்கும் ஸ்பெஷல் ஷோவுக்கு அனுமதி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வந்துள்ளார். தொடர்ந்து வழக்கு நடந்து வருகிறது.
இப்படியான நிலையில், 2025ம் ஆண்டு சங்கராந்திக்கு வெளியாக உள்ள ராம் சரணின் கேம் சேஞ்சர், பாலகிருஷ்ணாவின் டக்கு மகாராஜ், வெங்கடேஷின் சங்கராந்திகி வஸ்துனம் போன்ற படங்களின் ஸ்பெஷல் ஷோக்களை திரையிடுவதற்கு ஆந்திரா அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதோடு இந்த மூன்று படங்களின் டிக்கெட் விலையும் உயர்த்தப்பட உள்ளதாம்.