'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
நிறங்கள் மூன்று படத்திற்கு பிறகு, தற்போது ‛டிஎன்ஏ, அட்ரஸ், தானா' போன்ற படங்களில் நடித்து வருகிறார் அதர்வா. இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்திலும் அவர் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க, வில்லனாக ஜெயம் ரவி நடிக்கிறார். அதர்வாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த சிவகார்த்திகேயன் 25வது படத்தில் நடிப்பது குறித்து அதர்வா கூறுகையில், ‛‛பாலாவின் பரதேசி படத்தில் நடித்தபோதில் இருந்தே இயக்குனர் சுதா எனக்கு தெரியும். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். நாம் இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றுவோம் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். அதன் காரணமாகவே இந்த படத்தில் அவர் நடிக்க அழைத்ததும் சம்மதம் தெரிவித்தேன். இந்த படத்தில் அவர் எனக்கு ஒரு நல்ல வேடம் கொடுத்திருக்கிறார். இது சினிமாவில் எனக்கு திருப்புமுனையை தரக்கூடியதாக இருக்கும்'' என்கிறார் அதர்வா.