புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பை அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசரை, கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி, டிச.,25ம் தேதி வெளியிட்டனர். இதில் படத்திற்கு ‛ரெட்ரோ' என தலைப்பு வைத்துள்ளதுடன், 2025 கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் அறிவித்தனர். இதில் குளக்கரை ஒன்றில் பூஜா ஹெக்டே உடன் சூர்யா பேசும் காட்சிகளும் இடம்பெற்றது. டீசரில் பூஜா ஹெக்டே பேசுவது போன்ற காட்சிகளும், வசனங்களும் இடம்பெறவில்லை. இதுகுறித்து, ரசிகர்களிடம் கேள்விகள் எழுந்த நிலையில், இப்படத்தில் பூஜா வாய் பேச முடியாதவராக நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.