திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' |
ஆரம்ப கால தமிழ் சினிமாவில் பெங்காலி மொழியின் தாக்கம் அதிகமாக இருந்தது. பெங்காலி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் தமிழில் பணியாற்றினார்கள். பெங்காலி நாடகங்கள், நாட்டுப்புற கதைகள் தமிழில் சினிமா ஆனது. அவற்றில் முக்கியமானது பெங்காலியில் அப்போது நடத்தப்பட்டு வந்த 'அண்ணபூர்னா மந்திர்' என்ற நாடகம். இந்த நாடகத்தை 'குமாஸ்தாவின் மகள்' என்ற பெயரில் டிகேஎஸ் சதோதரர்கள் நாடகமாக நடத்தி வந்தார்கள். பின்னர் அதனை திரைப்படமாக தயாரித்தார்கள்.
ஒரு பணக்கார வீட்டில் குமாஸ்தாவாக பணியாற்றுகிறவருக்கு, சீதா, சரசா என இரண்டு மகள்கள். குறைந்த வருமானம் என்பதால் இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைக்க முடியாமல் தடுமாறுவார். ராமு என்பவர் சீர்திருத்த கருத்துகளை பேசி வருகிறவர். ஆனாலும் அவர் சீதாவை மணமுடிக்க வாய்ப்பு வந்தும் தனது சொந்த பணிகள் காரணமாக அதனை ஏற்க மறுத்து விடுவார்.
பின்னர் குமாஸ்தா தன் மகள் சீதாவை ஒரு பணக்கார முதியவருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து கொடுப்பார். சில வருடங்களிலேயே அந்த முதியவர் இறந்துவிட விதவையான சீதா இந்த சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவார்.
சீதாவின் மரணத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை உணரும் ராமு இன்னொரு மகளான சரசாவை திருமணம் செய்து கொள்வார். அப்போதெல்லாம் ஏழை தந்தைகள் தங்கள் மகள்களை பணக்கார முதியர்வளுக்கு திருமணம் செய்து கொடுப்பது சர்வசாதாரணமாக இருந்தது. அதனை இந்த சமூகம் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் இந்த படம் அப்படி திருமணம் செய்து கொடுக்கப்படும் பெண்களின் வலியை பேசிய விதத்தில் கவனம் பெற்றது. இந்த பட வெளியீட்டுக்கு பிறகு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.
ராமுவாக டி.கே.சண்முகமும், சீதாவாக எம்.வி ராஜம்மாவும், சரசாவாக திரவுபதியும் நடித்தனர். பி.என்.ராவ் இயக்கி இருந்தார். படம் வெளியாகி வெற்றி பெற்றது. ஜெமினி பிக்சர்ஸ் வெளியிட்டது.