'சேம் சேஞ்சர்' சென்னை விழாவில் விஜய் கலந்து கொள்வாரா? | அஜித்தின் விடாமுயற்சி எப்போது ரிலீஸ்? | ''15 வருட காதல்'': ரகசியம் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் | சத்தமின்றி திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் | சசிகுமார் - சிம்ரனின் ‛டூரிஸ்ட் பேமிலி' படப்பிடிப்பு முடிவடைந்தது | நேரம் சோதிக்கிறது… : வருத்தத்தில் சிலம்பரசன் | 5 வருடங்களுக்கு பிறகு கதையின் நாயகனாக ஷாம் | விடாமுயற்சி - டிரைலரை வெளியிட்டு ரசிகர்களை அமைதிப்படுத்த முயற்சி | விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் 'ட்ராமா' | பிளாஷ்பேக் : ஒலிம்பிக்கில் ஒலித்த இளையராஜா பாடல் |
இளமை துள்ளும் காதல் கதைகளை தேர்ந்தெடுத்தால் அதில் 'பன்னீர் புஷ்பங்கள்' படம் கட்டாயம் இடம்பெறும். காரணம் அந்த அளவிற்கு காதலும், இசையும், ஊட்டி குளிரும் போட்டி போட்டு கொண்டாடிய படம். இது காதல் படம்தான், ஆனால் பள்ளி பருவ காதலை வெறும் இனக்கவர்ச்சிதான் என்று புரிய வைத்த படம். இப்போது கூட பள்ளி மாணவர்கள் சீருடையுடன் காதலிக்கும் கதைகள், காட்சிகள் கொண்ட படங்கள் வருகிறது. குறிப்பாக இந்த படம் வெளிவந்த ஆண்டிலேயே 'அலைகள் ஓய்வதில்லை' படம் பள்ளி பருவ காதலை அங்கீரித்த படம். ஆனால் பன்னீர் புஷ்பங்கள் அதை வெறும் இனக்கவர்ச்சி என்று சொன்ன படம்.
சென்னையில் இருந்து ஊட்டிக்கு சென்று ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மாணவன் அரவிந்த் பிரபு (சுரேஷ்) கதையின் நாயகன். அதே ஊரில் வீட்டிலிருந்து படிக்கும் மாணவி உமா (சாந்திகிருஷ்ணா) கதையின் நாயகி. இவர்கள் பள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பு கொள்கிறார்கள், நட்பு காதலாகிறது. பள்ளிக்குப் புதிதாக வருகிற ஆசிரியர் பிரதாப் போத்தன், உமாவின் வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் தங்குகிறார். ஆசிரியரும் மாணவியும் பள்ளிக்குச் சேர்ந்து வருகிறார்கள், செல்கிறார்கள். இது அவர்கள் காதலுக்கு தடையாகிறது. இவர்கள் காதல் வெளியே தெரியவருகிறது.
உமா பள்ளி செல்வதை குடும்பம் தடுத்து நிறுத்துகிறது. இருவரும் ரயில் ஏறி சென்னைக்கு ஓடிவிட தீர்மானித்து ரயில் ஏறுகிறார்கள். அவர்களை தடுக்கும் ஆசிரியர் பிரதாப் போத்தன், உங்களுக்கு இருப்பது காதல் அல்ல; வெறும் இனக்கவர்ச்சிதான் என்று புரிய வைத்து இருவரையும் தொடர்ந்து படிக்க வைப்பார். இதுதான் படத்தின் கதை.
பாரதி & (பி.)பாசு இணைந்து இயக்கிய முதல் படம். சுரேஷ், சாந்திகிருஷ்ணா இருவரும் அறிமுகமான படம் இது. ஆசிரியர் பிரதாப் போத்தன், ஹாஸ்டல் வார்டன் வெண்ணிற ஆடை மூர்த்தி, மாணவன் மனோகர் அவ்வளவுதான் தெரிந்த முகங்கள். படத்தின் முக்கியமான பலம் இளையராஜா. 'கோடை கால காற்றே, ஆனந்தராகம் கேட்கும் காலம், பூந்தளிராட... பொன்மலர் சூட...' பாடல்கள் இன்றைக்கும் காதல் தேசிய கீதங்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இப்போதும் பன்னீர் புஷ்பங்கள் காதல் படமாக அல்ல, காதல் பாடமாக கொண்டாடப்படுகிறது.