'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பிக்பாஸ் வீட்டில் முன்னாள் போட்டியாளரான விஷ்ணு, தற்போது பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்றுள்ள சவுந்தர்யாவுக்காக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீசனில் ப்ரீ டாஸ்க்கில் போட்டியாளர்களின் காதலர்கள் அதிகமாக உள்ளே நுழைந்துள்ளனர். விஷாலுக்கு நேஹா, அருணுக்கு அர்ச்சனா என காதல் ஜோடிகளின் ரொமாண்டிக் டிராமா சற்று தூக்கலாக இருக்கிறது.
அந்த வகையில் சவுந்தர்யாவுக்காக என்ட்ரி கொடுத்துள்ள விஷ்ணுவிடம், பிக்பாஸ் வீட்டில் அனைவரது முன்னிலையிலும் சவுந்தர்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி புரொபோஸ் செய்துள்ளார். இதன்மூலம் பல நாட்களாக தங்களுக்குள் சர்ப்ரைஸாக வைத்திருந்த காதலை விஷ்ணு - சவுந்தர்யா ஜோடி நேயர்களுக்கு வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.