அஜித்தின் விடாமுயற்சியை முந்திய தண்டேல்! | பிப். 11ல் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' பட இசை வெளியீட்டு விழா! | ‛விடாமுயற்சி' இடைவேளையில் திரையிடப்படும் ஜி.வி.பிரகாஷின் ‛கிங்ஸ்டன்' டீசர் | பிப்-20ல் வெளியாகும் பிரியாமணி மலையாள படம் | எனக்கு அரெஸ்ட் வாரண்டா ? பொய் பரப்புவோர் மீது சோனு சூட் காட்டம் | ஆஸ்தான நடிகரையும் மோகன்லால் படத்தில் இணைத்துக் கொண்ட ஆவேசம் இயக்குனர் | வேட்டையன் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தேன் ; மலையாள நடிகர் அலான்சியர் லே | பிரதமர் மோடிக்கு நடன பொம்மைகளை பரிசளித்த நாகசைதன்யா - சோபிதா தம்பதி | தமிழில் வெப் தொடர் அறிமுகமாகிறார் ஜான்வி கபூர்! | போர் தொழில் இயக்குனரின் கதையில் அசோக் செல்வன்! |
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் உன்னி முகுந்தன். பல வருடங்களுக்கு முன்பே தமிழில் தனுஷின் சீடன் படத்தில் நடித்திருந்தாலும் சமீபத்தில் சசிகுமார், சூரியுடன் இணைந்து கருடா படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பெரிய அளவில் பிரபலமானார். அதுமட்டுமல்ல தெலுங்கு திரை உலகிலும் அனுஷ்கா, சமந்தா ஆகியோருக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது நடிப்பில் மிகப்பெரிய ஆக்சன் படமாக உருவாகியுள்ளது 'மார்கோ'. மம்முட்டி நடித்த 'தி கிரேட் ஆக்டர்' மற்றும் நிவின்பாலி நடித்த 'மைக்கேல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹனீப் அதேனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவு வன்முறை தெறிக்கும் விதமாக ஏழு சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனாலேயே இந்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 20ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் விரைவில் இதன் டிக்கெட் முன்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த படத்தை தயாரித்துள்ள சபீர் முகமது என்பவர் கேரள சட்டசபை சபாநாயகர் ஏஎன் சம்சீர் அவர்களுக்கு மிக நெருங்கிய நண்பர். அதனால் அந்த நட்பின் அடிப்படையில் இந்த படத்தின் முதல் டிக்கெட்டை பெற்றுக்கொண்டு இதன் விற்பனையை துவக்கி வைத்துள்ளார் சபாநாயகர்.
மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் இப்படி வன்முறை கலந்த ஒரு ஆக்சன் படத்திற்கு அதுவும் ஏ சான்றிதழ் பெற்ற ஒரு படத்திற்கு கேரள சபாநாயகர் முதல் டிக்கெட்டை பெற்றிருப்பது அழகல்ல என்று பலரும் சபாநாயகரின் இந்த செயலை விமர்சித்து வருகின்றனர்.