மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

உலகம் முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் 'முபாசா : தி லயன் கிங்'. டிஸ்னி நிறுவனத்தின் அனிமேஷன் படத்தின் தொடர்ச்சி இது. இந்த படம் வருகிற 20ம் தேதி வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் ஹிந்தி, தமிழ், தெலுங்கில் வெளிவருகிறது.
ஆங்கில பதிப்பிற்கு முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஹிந்தி பதிப்பில் முபாசாவுக்கு ஷாருக்கான் குரல் கொடுத்திருக்கிறார். தெலுங்கு பதிப்பில் மகேஷ் பாபு குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், சிவகார்த்திகேயனை அணுகியதாவும் அவர்கள் குரல் கொடுக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அர்ஜூன் தாஸ் குரல் கொடுத்துள்ளார். கரகரப்பான அவரது தனித்தன்மையான குரல் முசாபாவுக்கு கச்சிதமாக இருக்கும் என்பதால் அவரை தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
டக்கா கேரக்டருக்கு அசோக் செல்வனும், பும்பா கேரக்டருக்கு ரோபோ சங்கரும், டைமன் கேரக்டருக்கு சிங்கம்புலியும் குரல் கொடுத்திருக்கிறார்கள். மேலும், இளைய ரபிக்கின் குரலாக விடிவி கணேஷ் மற்றும் கிரோஸிற்கு நாசரும் குரல் கொடுத்துள்ளனர்.