ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
வடிவேலுவும், காமெடி நடிகர் சிங்கமுத்துவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தார்கள். சிங்கமுத்து காமெடியாக நடிப்பதுடன் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். அதனால் வடிவேலுவுக்கு பல சொத்துக்களை வாங்கி கொடுத்தார். இதில் சில சொத்து விவகாரங்களில் சிங்கமுத்து தன்னை மோசடி செய்து விட்டதாக கருதி அவரிடமிருந்து வடிவேலு விலகினார். அவர் மீது வழக்கும் தொடர்ந்தார். இதனால் சிங்கமுத்து, வடிவேலுவை கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து வந்தார்.
தன்னை பற்றி அவதூறு பரப்புவதாகவும், அதனால் 5 கோடி நஷ்டஈடு தரவேண்டும் என்றும் வடிவேலு, சிங்கமுத்து மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “தன்னைப் பற்றி அவதூறாக பேச சிங்கமுத்துக்கு தடைவிதிக்க வேண்டும். ஏற்கனவே அவர் அளித்த அவதூறு வீடியோவை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கவேண்டும்'' என்றும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்த சிங்கமுத்து “நடிகர் வடிவேலு குறித்து தனக்கு தெரிந்த கருத்தை மட்டுமே தெரிவித்ததாகவும், எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கவில்லை” என்றும் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடிவேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருகிறார்'' என்று கூறினார். ஆனால், “புதிதாக எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை” என்று சிங்கமுத்து தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் “வடிவேலுக்கு எதிராக இனி எந்த ஒரு அவதூறான கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன் என்றும் ஏற்கனவே தெரிவித்த அவதூறு கருத்துகளை திரும்ப பெறுகிறேன் என்றும் சிங்கமுத்து உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். சிங்கமுத்துவின் அவதூறு பேட்டியை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும். இல்லை என்றால் இதுகுறித்து உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என்று கூறி வழக்கை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டது.