இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
சமூக ஊடகங்களில் திரைப்பட விமர்சனம் என்பது தனிமனித தாக்குதலாகவும், திட்டமிட்டு ஒரு படத்தை உயர்த்தி பிடிப்பதாகவும், தாழ்த்துவதாகவும் மாறி உள்ளது. எனவே விமர்சனங்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என நடப்பு தயாரிப்பாளர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை பல தயாரிப்பாளர்களே கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். விமர்சனங்களை முடக்குவதன் மூலம் சிறுபடத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பேசி வருகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
திரைப்படங்களின் விமர்சனங்களை பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட திரைப்படம் வெளியான மூன்று நாட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற, நீதிமன்றத்தில் நமது சங்கத்தின் கோரிக்கை, சமீப காலங்களில் சில ஊடகங்கள் தனிப்பட்ட வன்மத்துடன், சில திரைப்படங்களுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதையும், தனி மனித தாக்குதல் செய்து வருவதையும் தடுக்கவே தவிர, ஒட்டுமொத்தமாக அனைத்து ஊடங்கங்களுக்கும் எதிரானது அல்ல.
அப்படிப்பட்ட சிலரை மட்டுமே தடுக்க முடியாத காரணத்தினால் தான், ஒட்டுமொத்தமாக மூன்று நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை கேட்டு நீதிமன்றம் சென்று இருக்கிறோம். இதே காரணத்திற்காகத்தான், ஏற்கனவே மலையாள திரைப்பட உலகமும் நீதிமன்றம் சென்றுள்ளது.
பாரம்பரியமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களின் இணையதளங்களில் எப்போதும் திரைப்படங்களை, திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களை தரம் தாழ்த்தி விமர்சிப்பது இல்லை. சில ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் தவிர, மீதம் உள்ள அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் திரைப்பட உலகிற்கு ஆதரவாக இருக்கிறார்கள். பல திரைப்படங்களின் வெற்றிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள் என்பதை நாங்கள் பல முறை திரைப்பட நிகழ்வுகளில் சொல்லி இருக்கிறோம். மீண்டும் இங்கு சொல்ல விரும்புகிறோம்.
சங்கத்தின் இந்த முயற்சி அனைத்து ஊடங்களுக்கும் எதிரானது அல்ல. ஒட்டுமொத்தமாக அனைவரையும் புறக்கணிப்பது நமது சங்கத்தின் நோக்கம் இல்லை. அதேபோல, அப்படிப்பட்ட நடுநிலையான ஊடங்கங்களின் ஆதரவை எதிர்பார்த்திருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் எதிரானது அல்ல நமது சங்கத்தின் இந்த செயல்பாடு.
நீதி மன்றத்திலிருந்து இது குறித்து ஒரு சரியான வழிமுறை வரும் வரை, தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கான பத்திரிகை தொடர்பாளர்கள் பரிந்துரைக்கும், ஊடகங்கள், திரைப்படங்களை பார்த்து விமர்சனங்களை வெளியிடுவதில், எந்த எதிர்ப்பும் நமது சங்கத்தில் இருந்து இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம். விரைவில் சட்டரீதியாக, நீதிமன்றத்தில் இதற்கு ஒரு தீர்வும் எட்டப்படும் என்று நம்புகிறோம். தயாரிப்பாளர்களின் நலன் காக்கவே நமது சங்கம் இந்த முயற்சியை எடுத்துள்ளது. எனவே, இந்த விளக்கத்தையும், செயல்முறையையும், தயாரிப்பாளர்கள் சரியான முறையில் பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.