இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடி வசூல், 25 நாட்களைக் கடந்து ஓட்டம் என வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்த படத்தில் சாய் பல்லவியின் செல்போன் எண் என காட்டப்படும் நம்பர், மாணவர் வாகீசன் என்பவரது தாம். அந்த செல்போன் எண் சாய் பல்லவியின் உண்மையான செல்போன் எண் என பல ரசிகர்கள் வாகீசனைத் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த வேதனை அடைந்ததாக கூறி 'அமரன்' படக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் வாகீசன்.
மேலும் அமரன் திரைப்படத்தை திரையிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமரன் படத்தில் வரும் மாணவரின் செல்போன் எண் வரும் காட்சி நீக்கப்பட்டு, புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் இழப்பீடு கோர முடியாது என்று கூறிய கோர்ட், வழக்கு விசாரணையை டிச.20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.