தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
மாற்று சினிமாவை முன்னெடுத்தவர்களில் முக்கியமானர்கள் கே.பாலச்சந்தர், ருத்ரையா, ஜெயபாரதி. சிறந்த ஆங்கில அறிவு மிக்க ஜெயபாரதி அந்த காலத்திலேயே உலக படங்களை தேடித் தேடிச் சென்று பார்த்தவர். பிரபலமான ஆங்கில பத்திரிகை ஒன்றில் சினிமா விமர்சகராக இருந்தார். அப்போது அவர் எல்லோருமே கொண்டாடிய கே.பாலச்சந்தரின் படங்களை கிழித்து தொங்கவிட்டார். இதனால் பாலச்சந்தருக்கு ஜெயபாரதி மீது கடும் கோபம்.
ஒரு நாள் அவரை தன் அலுவலத்திற்கு அழைத்த கே.பாலச்சந்தர். “என்னய்யா எந்த மாதிரி படம் எடுத்தாலும் குறை சொல்றியே... நீயே ஒரு நல்ல படம் எடுத்து இப்படித்தான் படம் எடுக்கணும்னு சொல்லேன்” என்றார். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜெயபாரதி. “உங்க சவால நான் ஏத்துக்குறேன். நானே ஒரு படம் எடுத்து காட்டுகிறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினார். அப்போது பாலச்சந்தர் “படம் எடுக்கிறதுக்கு லட்சக் கணக்குல பணம் வேணும் தெரியுமா?” என்றார். “நான் மக்களுக்காக படம் எடுக்குறேன். அதற்கான பணத்தை நான் அவர்கள்கிட்டேயே வாங்கிக்கிறேன்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இந்த சவாலில் பிறந்ததுதான் 'குடிசை' படம். நடுத்தர மக்கள் பற்றி படம் வந்து கொண்டிருந்த காலத்தில் சென்னையில் வாழும் சேரி மக்களின் வாழ்க்கை சொன்ன படம் இது. இதில் நாயகனாக டெல்லி கணேசும், நாயகியாக கமலா காமேசும் நடித்தனர்.
பாலச்சந்தரை எதிர்த்து படம் எடுப்பதால் அப்போதுள்ள நடிகைகள் இவரது படத்தில் நடிக்க தயங்கினர். அவர்கள் கேட்கும் சம்பளத்தையும் இவரால் கொடுக்க முடியவில்லை. அப்போது இவரது நண்பராக இருந்தவர்தான் மயிலாப்பூர் காமேஷ். அவர் இசை கச்சேரிகள் நடத்திக் கொண்டிருந்தார். காமேசும் சேர்ந்துதான் குடிசை படத்திற்கு நாயகி தேடிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது சாப்பாடு பரிமாறியவர் காமேஷ் மனைவி கமலா. அவரை கவனித்த ஜெயபாரதி கமலாதன் என் படத்தின் நாயகி என்று அப்போதே முடிவு செய்து அவரை நடிக்க வைத்தார்.
படம் நல்ல வரவேற்பை பெற்றது. விருதுகள் பல பெற்றது. சாதாரண ஜெயபாரதி 'குடிசை ஜெயபாரதி' ஆனார். பின்னாளில் இதுகுறித்து பேசிய கே.பாலச்சந்தர். “அவன் ஒரு படைப்பாளிங்றது அவன் எழுத்துகள்லேருந்து நான் புரிஞ்சுகிட்டேன். அவன்கிட்டேருந்து ஒரு படைப்பு வெளியில வரணும்னா அவனை கோபப்படுத்தணும்னுதான் அவனை அழைத்து பேசினேன். என் திட்டம் சக்சஸ் ஆயிடுச்சு” என்று கூறினார்.