அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

தமிழ் சினிமாவில் யதார்த்த இயக்குனர்களில் ஒருவர் ஜெயபாரதி, முதன் முதலான சென்னை சேரிப்பகுதி மக்களின் வாழ்க்கையை 'குடிசை' என்ற பெயரில் திரைப்படமாக இயக்கியதால் 'குடிசை ஜெயபாரதி' என்றே இப்போதும் அழைக்கப்படுகிறார்.
ஆரம்பத்தில் சினிமா விமர்சகராக இருந்த ஜெயபாரதி கே.பாலச்சந்தரின் படங்களை கடுமையாக விமர்சித்து வந்தார். ஒரு நாள் ஜெயபாரதியை அழைத்து கடிந்து கொண்ட கே.பாலச்சந்தர் “நல்ல படம் எடுக்கிறது எப்படின்னு எனக்கு சொல்லித் தரமுடியுமா?” என்று கோபமாக கேட்டார். “சொல்லித் தருவதென்ன எடுத்து காட்டுகிறேன்” என்று சவால்விட்டு கிரவுண்ட் பண்டிங் முறையில் அவர் எடுத்த படம்தான் 'குடிசை'.
அதன்பிறகு ஒரு நாள் அவரை அழைத்து பாராட்டிய கே.பாசலச்சந்தர். “சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டியே” என்று பாராட்டினார். அந்த படத்தின் சாயலில்தான் அவர் 'தப்பு தாளங்கள்' படத்தை பின்னாளில் இயக்கினார். இதனால் கே.பாலச்சந்தருக்கும் ஜெயபாரதிக்கும் ஆழமான நட்பு ஏற்பட்டது.
ஒருமுறை “உன்னோட கண்கள் தீர்க்கமானவை. நீ ஏன் என் படத்தில் நடிக்கக் கூடாது? ரெண்டு ஸ்டில்ஸ் எடுத்துட்டுவா” என்றார். ஆனால் ஜெயபாரதி அதை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. “நான் உங்கள் படத்தை விமர்சிப்பதில் இருந்தும், நான் படம் இயக்குவதில் இருந்தும் என்னை திசை திருப்ப பார்க்கிறீர்கள்” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
அந்த படம் 'மூன்று முடிச்சு'. ஜெயபாரதி மறுத்து ஒதுங்கியதால் ரஜினி நடித்தார். வருமானம் இல்லாவிட்டாலும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காத ஜெயபாரதிக்கு இன்று 75வது பிறந்த நாள்.