டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பின்னணி பாடகியும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா பல ஆண்டுகளுக்கு முன் 'சுச்சி லீக்ஸ்' விவகாரத்தில் சிக்கி பரபரப்பு கிளப்பினார். தற்போது திடீரென பல யு-டியூப் சேனல்களுக்கு பரபரப்பு பேட்டி கொடுத்தார். அதில் கமல்ஹாசன் முதல் தனுஷ் வரை பலரையும் விமர்சித்தார். அவரது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஓரினச் சேர்க்கையாளர் என்றும் விமர்சித்தார்.
இந்த நிலையில் இனி யு-டியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுக்க மாட்டேன். எனது பேட்டிகளை தவறான கண்ணோட்டத்துடன் ஒளிபரப்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: நான் பல யு-டியூப் சேனல்களை பார்த்து வருகிறேன். அதில் தலைப்புகளில் என்னை பற்றி தவறாக கூறுகின்றார்கள். ஆனால் இது எல்லாம் எந்த ஆதாரத்தை வைத்து அவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் யோசிக்க போவதுமில்லை. இனி எந்த ஒரு யு-டியூப் சேனலுக்கும் நான் பேட்டி கொடுக்கப் போவதில்லை. இனி எனது சொந்த சேனலில் மட்டுமே பேசுவேன். அதில் சினிமா விமர்சனங்களையும், தத்துவம் நிறைந்த விஷயங்களை பற்றிய வீடியோக்களை மட்டுமே நான் வெளியிடுவேன் என்று கூறியுள்ளார்.