காஞ்சனா 4ம் பாகத்தில் இணைந்த இளம் சீரியல் நடிகை | பாவ்னி - அமீருக்கு ஏப்., 20ல் டும் டும் | கேஜிஎப் 2வை 15 நிமிடத்துக்கு மேல் தொடர்ந்து பார்க்க முடியவில்லை : ராம்கோபால் வர்மா | எம்புரான் படத்தில் நடித்த பாலிவுட் நடிகைக்கு தினசரி மூன்று மணி நேரம் மேக்கப் | 2 வருடம் கழித்து ஓடிடியில் வெளியான மைக்கேல் படத்திற்கு வந்த சோதனை | மகேஷ்பாபுவின் மச்சினிச்சியை கிண்டலடித்த பரா கான் | இங்கிலாந்து திரைப்பட கல்லூரியில் பாடமாக எடுக்கப்பட்ட மம்முட்டியின் பிரம்மயுகம் | த்ரிஷா வீட்டிற்குப் புதிய வரவு இஸ்ஸி | தமிழில் கலக்க வரும் மராத்திய நடிகை | இளையராஜாவின் 'பேரன்பும் பெருங்கோபமும்' |
சென்னை: நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த, எழுத்தாளரும், தேசிய விருது பெற்ற இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி இன்று (டிச.,06) காலமானார். அவருக்கு வயது 77.
எழுத்தாளரும், இயக்குனருமான 'குடிசை' ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி, இன்று(டிச., 6) காலை காலமானார்.
கடந்த 1979ல் கிரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்பட்டு வெளியான 'குடிசை' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபாரதி. பத்திரிகையாளராக இருந்து சினிமா துறைக்கு வந்தவர். வணிக சினிமா எடுக்க விரும்பாமல், யதார்த்தமான கதைகளைக் கொண்ட மாற்று சினிமா மட்டுமே எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டவர்.
இவரது இயக்கத்தில் 'குடிசை', 'ஊமை ஜனங்கள்', 'ரெண்டும் ரெண்டும் அஞ்சு', உச்சி வெயில்', 'நண்பா நண்பா', 'குருஷேத்திரம்', 'புத்திரன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இவர் இயக்கிய குடிசை படம் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, பல்வேறு விருதுகளையும் பெற்றது.
கடைசியாக 2010ம் ஆண்டு 'புத்திரன்' என்ற படத்தை இயக்கினார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.