செப்டம்பர் 19ல் 4 படங்கள் ரிலீஸ் | மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலிடத்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் |
'ரேஸ் வித் தி டெவில்' என்ற ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் உருவான தமிழ் படம் 'கழுகு'. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ரஜினிகாந்த், ரதி, சுமலதா, சங்கிலி முருகன், தேங்காய் சீனிவாசன், வி.கே.ராமசாமி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சமையல் அறை, குளியல் அறை, படுக்கை அறை என எல்லா வசதிகளும் நிறைந்த ஒரு பேருந்தில் பயணம் செய்யும் புதுமண தம்பதிகள் சந்திக்கும் விபரீத பிரச்சினைகள்தான் ஹாலிவுட் படத்தின் கதை. அதை சற்று மாற்றி தம்பதிகளுடன் சில நண்பர்கள் செல்வது போலவும், அப்போது பரவலாக பேசப்பட்ட ஒரு போலி சாமியார் கதையையும் இணைத்து 'கழுகு' உருவானது.
இந்த படத்திற்காக புதிதாக ஒரு பஸ்சை வாங்கினார் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், அந்த பஸ் படம் முழுக்க ஒரு கேரக்டராகவே வரும். படத்தின் கிளைமாக்சில் பஸ் எரிக்கப்பட வேண்டும். ஆனால் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அந்த பஸ்சை ரஜினிக்கு அன்பளிப்பாக கொடுத்து விட தீர்மானித்தார். எல்லா வசதிகளும் அந்த பஸ்சில் இருப்பதால் அதனை ரஜினி கேரவனாக பயன்படுத்திக் கொள்வார் என்று கருதினார்.
இதை ரஜினியிடம் அவர் சொன்னபோது அதை மறுத்த ரஜினி. கிளைமாக்சில் பஸ் எரிக்கப்படும் காட்சி இயல்பாக இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதனால் நிஜமாகவே பஸ்சை எரித்து விடுங்கள் என்றார். அதன்பிறகு பஸ்சில் இருந்த சில முக்கியமான பாகங்களை மட்டும் எடுத்து விட்டு பஸ்சை எரிப்பது போன்ற கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது. ஆனால் இறுதியில் பஸ் தீக்கிரையாகாது. தீப்பந்தங்களுடன் சாமியார் ஆட்கள் பஸ்சை முற்றுகையிட்டு சண்டை போடுவது போன்று இருக்கும். இறுதியில் போலீசார் வந்து சாமியார் ஆட்களை கைது செய்வது போன்று படம் முடியும்.