ரஜினி நடிக்கும் 'ஜெயிலர் 2': அதிகாரப்பூர்வ அறிவிப்பு | காதலர்களுக்கு அனுபமா பரமேஸ்வரன் தரும் எச்சரிக்கை டிப்ஸ் | நடிகை ஹனிராஸ் மீது அவதூறு பரப்பிய மீடியா ஆர்வலருக்கு ஜாமீன் மறுப்பு | நடிகையை உருவ கேலி செய்த இயக்குனர் : பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் | சரத்குமார் நடிக்கும் ஏழாம் இரவில் | தாராவியில் பொங்கல் கொண்டாடிய ஓவியா | பாடலாசிரியர் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி! | தக் லைப் படத்தின் தெலுங்கு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | அகண்டா 2ம் பாகம் படப்பிடிப்பு இன்று துவங்கியது! | 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன் பர்ஸ்ட் லுக் வெளியானது! |
2013ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'சூது கவ்வும்'. நலன் குமார்சாமி இலக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. இதனை அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கி உள்ளார். மிர்ச்சி சிவா, ஹரிஷா ஜஸ்டின், வாகை சந்திரசேகர், ராதா ரவி, எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ், கல்கி, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் ஹரி. ஆகியோர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சி. வி. குமார் மற்றும் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 13ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் மூலம் ஹரிஷா ஜஸ்டின் வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். பழம்பெரும் நடிகர் ஜஸ்டின். எம்ஜிஆருக்கு நெருக்கமாக வில்லன் நடிகராக இருந்தார். இவரது மகள் பபிதா சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கவர்ச்சியாக ஒரு பாட்டிற்கு நடனமாடினார். தற்போது 3வது தலைமுறையாக பபிதாவின் மகள் ஹரிஷா வந்திருக்கிறார். ஏற்கெனவே சில சிறிய படங்களில் அவர் நடித்திருந்தாலும் அந்த படங்கள் வெளிவராத நிலையில் தற்போது 'சூதுகவ்வும் 2' படம் ரிலீசாகிறது. அதனால் இதுவே அவரது முதல் படமாகிறது.