வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ஹிந்தி தவிர்த்த பிராந்திய மொழிகளில் அதிகம் புகழ்பெற்ற அதிகம் சம்பளம் வாங்குகிற நடிகரும் அவர்தான். கடந்த ஆண்டு மட்டும் அவர் 80 கோடி ரூபாய் வரை அரசிற்கு வரியாக செலுத்தி உள்ளார். தனி நபர் செலுத்திய வரியில் இது சாதனை அளவாக கருதப்படுகிறது. இந்த தகவலை இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆண்டு தோறும் அதிக வரி செலுத்துவோர் பட்டியலை இந்த அமைப்பு வெளியிடும்.
2023-2024-ம் நிதி ஆண்டில் அதிக வரி செலுத்தும் நடிகர்-நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 90 கோடி வரி ரூபாய் வரி செலுத்தி உள்ளார். 75 கோடி வரி செலுத்திய சல்மான்கானுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. நான்காவது இடத்தில் அமிதாப்பச்சன் இருக்கிறார். இவர் 71 கோடி வரி செலுத்தி உள்ளார். அஜய் தேவ்கான் 42 கோடி வரி செலுத்தி 5வது இடத்தில் இருக்கிறார். விஜய்க்கு அடுத்து தென்னிந்திய நடிகராக அல்லு அர்ஜுன் 14 கோடி வரி செலுத்தி உள்ளார்.