ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழ் சினிமாவில் தனது நாடங்களின் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் கோமல் சுவாமிநாதன். காரைக்குடியில் பிறந்து வளர்ந்த இவர் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றினார். பணி நேரம் போக மீதி நேரத்தை நாடகங்களுக்கு செலவிட்டார். நல்ல நாடகங்கள் பார்க்க அடிக்கடி சென்னை வருவார். 'பாலர் சோலை' என்ற பத்திரிகை நடத்தினார். 'தமிழ் எழுச்சி மன்றம்' என்ற அமைப்பை நடத்தினார். 1953ல் நண்பர்களுடன் இணைந்து 'இதயத் துடிப்பு' என்று நாடகத்தை அரங்கேற்றினார். இதுதான் அவரது முதல் நாடகம்.
பின்னர் சென்னை வந்த கோமல் இங்கு தீவிர நாடக பணியில் இறங்கினார். நாடங்களின் நுணுக்கங்களை கற்று தானே எழுதிய 'புதிய பாதை' என்ற நாடகத்தை 1961ம் ஆண்டு அரங்கேற்றினார். அதன் பிறகு தானே 'ஸ்டேஜ் பிரண்ட்ஸ்' என்ற நாடக கம்பெனி தொடங்கி ஏராளமான நாடகங்களை எழுதி அரங்கேற்றினார்.
அவர் நடத்திய 'நவாப் நாற்காலி','தண்ணீர் தண்ணீர்' நாடகங்கள் அதேபெயரில் திரைப்படமானது. சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் 'தண்ணீர் தண்ணீர்' பெற்றது. இவரது 'செக்கு மாடுகள்' நாடகம் 'சாதிக்கொரு நீதி' என்ற பெயரிலும், 'ஒரு இந்திய கனவு' அதே பெயரிலும், 'பெருமாளே சாட்சி' என்ற நாடகம் 'குமார விஜயம்' என்ற பெயரிலும், 'ராஜபரம்பரை' நாடகம் 'பாலூட்டி வளர்த்த கிளி' என்ற பெயரிலும், 'டெல்லி மாமியார்' நாடகம் 'கற்பகம் வந்தாச்சு' என்ற பெயரிலும் திரைப்படங்களானது. இவரது அசோக வனம், இருட்டில் தேடாதீங்க, நாற்காலி, என் வீடு என் கணவன் என் குழந்தை போன்ற நாடகங்கள் தொலைக்காட்சி தொடர்களானது.
அனல் காற்று, யுத்த காண்டம், ஒரு இந்திய கனவு படங்களை இயக்கினார். நாடகத்தில் வெற்றி பெற்ற கோமல் சுவாமிநாதனால் திரைப்படத்தில் வெற்றிபெற முடியவில்லை.