நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
அக்மார்க் தமிழரான ஜே.சி.டேனியல் தான் மலையாள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிறார். தமிழ்நாட்டில் சினிமா வேகமாக வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் மலையாளிகள் சினிமா பற்றி அறியாதவர்களாக நாடகங்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஜே.சி.டேனியில் குடும்பம் கேரளாவில் செட்டிலான வசதியான தமிழ் குடும்பம். திருவிதாங்கூரில் உயர் கல்வியை முடித்த நிலையில் திரைப்படம் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார் டேனியல். அவர் பெரிய களரி வீரராக இருந்தார். இதை மக்களிடம் சினிமா மூலம் கொண்டு சேர்க்க நினைக்கிறார்.
மலையாளத்தில் அவர் சினிமா தயாரிக்க முயன்றபோது அதற்கான எந்த வசதியும் அங்கு இல்லை. வெறும் புத்தக படிப்பு மட்டும் சினிமாவிற்கு போதாது என்று கருதி, நேரடியாக சினிமா அனுபவத்தை பெறுவதற்காக சென்னை வந்தார். அப்போதிருந்த பல ஸ்டூடியோக்களில் நடந்த படப்பிடிப்பை காணவும், பணியாற்றவும் முயற்சித்தார். ஆனால் சென்னை ஸ்டூடியோக்களின் கதவுகள் அவருக்கு திறக்கவில்லை.
இதனால் மனம் வெறுத்த டேனியல் மும்பைக்கு சென்று அங்கு தன்னை ஒரு ஆசிரியர் என்றும், மாணவர்களுக்கு சினிமா பற்றி கற்றுக்கொடுப்பதற்காக நான் கற்றுக் கொள்ள வந்திருக்கிறேன் என்று கூறி அங்கு சில ஸ்டூடியோக்களில் வேலை பார்த்து சினிமா அனுபவங்களை கற்றுக் கொண்டும், சினிமாவுக்கு தேவையான கேமரா உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டும் கேரளா திரும்பினார்.
தனக்கு சொந்தமான ஒரு இடத்தை 4 லட்சம் ரூபாய்க்கு விற்று அந்த பணத்தை கொண்டு அவர் இயக்கி நடித்த படம்தான் 'விகதகுமாரன்'. மலையாள சினிமாவின் முதல் படம். மவுனப் படம். இந்த படத்தை தயாரிப்பதற்காகவே திருவிதாங்கூர் நேஷனல் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும், ஸ்டூடியோவையும் கட்டினார். தமிழ்நாட்டில் புராண படங்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் மலையாளத்தின் முதல் படத்தையே சமூக படமாகவும், பக்கா கமர்ஷியல் படமாகவும் உருவாக்கினார் டேனியல். அதனால்தான் அவர் மலையாள சினிமாவின் தந்தையாக போற்றப்படுகிறார். அதேசமயம் படத்திற்கு தேவையற்ற ஜாதி ரீதியான வெறுப்புகள் எழ படம் நஷ்டமானது. அதனால் தனது ஸ்டுடியோ, சினிமா உபகரணங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின்னாளில் அவர் தனது இறுதி நாட்களை பாளையங்கோட்டை அருகே கழித்து மறைந்தார்.