வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | உயிரை காத்த ஆட்டோ ஓட்டுநரை சந்தித்து கவுரவித்த சைப் அலிகான் | மாதவன் பயந்த இரண்டு விஷயங்கள் | ஜெயிலர் 2 : சிவராஜ்குமாருக்கு பதில் பாலகிருஷ்ணா | சுந்தர்.சி யின் வல்லான் டீசர் வெளியீடு | யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்து 2021ல் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா 1'. அந்தப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மற்ற மொழிகளிலும் கூட பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது. அது போல தற்போது வெளியாக உள்ள 'புஷ்பா 2' பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.
முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு பிரபல கதாநாயகியான சமந்தா ஒரு கிளாமர் நடனமாடினார். அது போலவே இரண்டாம் பாகத்தில் தெலுங்கில் மட்டும் பிரபலமான கதாநாயகி ஸ்ரீலீலா 'கிஸ்ஸிக்' என்ற பாடலுக்கு கிளாமர் நடனமாடியுள்ளார்.
இதனிடையே, படத்தின் மற்றொரு பாடலான 'பீலிங்ஸ்' பாடல் நேற்று வெளியானது. அப்பாடலில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடனமாடியுள்ளனர். நடனத்தில் சிறந்து விளங்குபவர் அல்லு அர்ஜுன். அவருக்குப் போட்டியாக ராஷ்மிகாவும் அதிரடியாக ஆடியுள்ளார். அது மட்டுமல்ல அவரது ஆடையிலும் கிளாமர் அதிகமாக உள்ளது. மேலும், நடனத்தில் உள்ள சில அசைவுகள் ஆபாசமாக இருப்பதாகவும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஒரு பாடலுக்கு ஸ்ரீலீலாவை ஆட வைத்ததற்குப் பதிலாக அந்தப் பாடலுக்கும் ராஷ்மிகாவையே நடனமாட வைத்திருக்கலாமே என்பதும் சிலரது கமெண்ட்டாக உள்ளது. 'கிஸ்ஸிக்' பாடலை விடவும் இந்த 'பீலிங்ஸ்' பாடலுக்கு தெலுங்கு ரசிகர்கள் தியேட்டர்களை ரணகளமாக்குவார்கள் என அங்குள்ள விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.