காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படம் வருகிற பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இதேநாளில் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் படமும் வெளியாகிறது. இதனால் அஜித் படத்துக்கும், ஷங்கர் படத்துக்கும் இடையே போட்டி ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் கேம் சேஞ்சர் படத்தில் வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவுக்கு நேற்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, அஜித்தின் விடாமுயற்சிக்கும், ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திற்கும் இடையே எந்தவித போட்டியும் கிடையாது. அதோடு கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸை இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டோம். விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி இப்போது தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு தமிழ்நாட்டில் அஜித் படத்திற்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தாலும் கூட கேம் சேஞ்சர் ஷங்கர் படம் என்பதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.