2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் | ஒரே ஆண்டில் 80 கோடி வரி செலுத்தி விஜய் சாதனை | கனடா நாடாளுமன்றத்தில் கருணாசுக்கு கவுரவம் | கன்னட நடிகை ஷோபிதா மரணம் | தமிழ் ஹீரோக்களுக்கு சறுக்கலைத் தந்த சரித்திரப் படங்கள் |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தில் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில்தான் அனிருத்தும் அறிமுகமானார். அதன்பிறகு பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவானார் சிவகார்த்திகேயன். பின்னர் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், டாக்டர், மாவீரன், அமரன் என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், என் மனைவி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ சினிமாவில் இருந்து வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார். காரணம், சினிமாவில் யார் எங்கிருந்து நம்மை நோக்கி அம்பு விட்டு தாக்குவார்கள் என்று சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு பிரச்சனைகள் பல ரூபத்தில் வந்து நம்மை தாக்கும். அது போன்ற ஒரு பிரச்சனையால் ஒருமுறை பெரிய அளவில் நான் மனசுடைந்து விட்டேன். சினிமா வை விட்டே வெளியேற முடிவெடுத்தேன். அப்போது என் மனைவி தான் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளியுங்கள். சினிமாவை விட்டு மட்டும் ஒருபோதும் செல்லக்கூடாது என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன பிறகுதான் எந்த பிரச்னை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்படி என் மனைவி சொல்லவில்லை என்றால் சினிமாவை விட்டு எப்போதோ வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.