மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'விடாமுயற்சி'. வெளியான ஒரு வாரத்தில் இப்படம் 130 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியான முதல் நான்கு நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைக் கடந்தது.
ஆனால், வார நாளின் முதல் நாளான திங்களன்று படத்தின் வசூல் வெகுவாகக் குறைந்தது. அதன்பின் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை நாள் என்பதால் வசூல் சுமாராக இருந்தது. அதே சமயம் நேற்று மீண்டும் வசூல் குறைந்துள்ளது. இன்று இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ள 'விடாமுயற்சி' படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 200 கோடி வசூலைக் கடந்தால் அதுவே பெரிய விஷயம் என்கிறார்கள்.
படத்தின் பட்ஜெட் 300 கோடி வரை இருக்கும் என்பதுதான் தகவல். அது உண்மையென்றால் வசூல் ரீதியாக படம் தோல்வியைத் தழுவவே வாய்ப்புகள் அதிகம் என்று சொல்கிறார்கள். விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'தி கோட்' படத்தின் வசூலான 400 கோடியை இப்படம் கடக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.