மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் அவரது நினைவை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், பாடகியும், பவதாரிணியின் தோழியுமான ஷாலினி சிங் கூறியிருப்பதாவது: பவதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தப் பாடல்களை நீங்கள் எவ்வளவு நேசித்தீர்கள் என்பது எனக்குத் தெரியும், உங்கள் பிறந்தநாளில், எனக்குத் தெரிந்த விதத்தில் - இசை மூலம் -உங்களை கவுரவிக்க விரும்பினேன். உங்கள் தந்தை மேஸ்ட்ரோ இளையராஜாவுக்காக நீங்கள் மிகவும் அழகாகப் பாடிய பாடல்களையும் ஒன்றிணைக்கிறது.
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் உங்கள் குரல், உங்கள் சிரிப்பு மற்றும் நாங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகள் அப்படியே உள்ளன. இந்த அஞ்சலி உங்களைக் கொண்டாடுவதற்கான எனது வழி. உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம், எப்போதும் நினைவில் வைத்திருக்கிறோம், என்றென்றும் நேசிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த கோட் படத்தில் ஏ ஐ தொழில் நுட்பம் மூலம் பவதாரணி குரலை அவரது சகோதரர்களுக்கான யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகிய அழகாக ரீ கிரியேட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.