இத்தாலி கார் ரேஸ்: 3வது இடம் பிடித்து மீண்டும் அஜித் அணி அசத்தல் | அட்லி படத்தில் நடிக்க அல்லு அர்ஜுனுக்கு 175 கோடி சம்பளமா? | விமானத்தில் செல்லும்போது மொபைலை தொலைத்த பூஜா ஹெக்டே! | விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தின் சென்சார், ரன்னிங் டைம் வெளியானது! | 75 நாட்களில் திரைக்கு வரும் தக்லைப்! போஸ்டர் வெளியிட்ட படக்குழு!! | வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‛தி வெர்டிக்ட்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பயங்கரவாத சம்பவங்களை ஒப்பிட்டு கடலோர மக்களுக்காக ரஜினி வீடியோ வெளியீடு | ஜூன் மாதத்தில் துவங்கும் சூர்யா 46 படப்பிடிப்பு! | கார்த்திக்கு ஜோடியாகும் கல்யாணி பிரியதர்ஷன்! | 'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்தாண்டு இந்த உலகை விட்டு மறைந்தார். அவர் மறைந்து ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் நேற்று அவரின் பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் தான் அவரது திதியும் வந்தது. இதனால் அவருக்கு ஒரு இசை அஞ்சலி நேற்று செலுத்த உள்ளதாக ஏற்கனவே இளையராஜா அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் பி.ஜி.பிக்சர்ஸ் சார்பில் ஜலீல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'புயலில் ஒரு தோணி'. புதுமுகங்கள் விஷ்ணு பிரகாஷ், அர்ச்சனா சிங், இளவரசு, ராதாரவி, நமோ நாராயணன் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார். மறைந்த இசையமைப்பாளர் பவதாரிணி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைப்பில் உருவான கடைசி படமும் இதுதான்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இளையராஜா கலந்து கொண்டு பாடலை வெளியிட்டார். மேலும் இளையராஜா பவதாரிணி பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டதுடன் பவதாரிணி இதுவரை பாடிய பாடல்களை தனது இசைக்குழு மூலமாக இசைக்க செய்தார்.
இளையராஜா பேசும்போது, “இன்று(நேற்று) தான் பவதாரிணி பிறந்தநாளும் கூட. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய பிறந்த நாளும் அவர் இறந்த திதியும் ஒரே நாளில் வந்துள்ளது. பெரும்பாலும் இப்படி யாருக்கும் அமைந்ததில்லை. அவருடைய ஆத்மா சாந்தி அடைந்திருக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். அவர் கடைசியாக இசையமைத்த 'புயலில் ஒரு தோணி' படத்தின் இசை வெளியீட்டு விழா இங்கே நடக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதுவரை பவதாரிணி இசையமைத்து பாடிய பாடல்களை இங்கே எனது குழுவினர் பவதாரிணியின் நினைவாக இசையமைத்துப் பாட இருக்கிறார்கள். பவதாரணி இந்த உலகை விட்டு செல்வதற்கு முன் என்னுடன் கழித்த நாட்கள் என்னால் மறக்க முடியாதது” என்று நெகிழ்வுடன் கூறினார்.
இந்த நிகழ்வில் இசையமைப்பாளர், இயக்குனருமான கங்கை அமரன், இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, பாடலாசிரியர் சினேகன், தயாரிப்பாளர் டி.சிவா, ஜெ.எம்.பஷீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பவதாரிணிக்கு தங்களது நினைவஞ்சலியை செலுத்தினர்.