இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்வதையே வழக்கமாக வைத்துள்ள இயக்குனர் ராம் கோபால் வர்மா, சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த்தைப் பற்றி விமர்சித்துள்ளார்.
“நடிப்பு என்பது ஒரு கதாபாத்திரத்தைப் பற்றியது. ஸ்டார் என்பது ஒரு நடிப்பைப் பற்றியது. இரண்டிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா? எனக்குத் தெரியாது. 'சத்யா' படத்தில் மனோஜ் பாஜ்பாய் நடித்த பிகு மத்ரே கதாபாத்திரத்தில் ரஜினியால் நடிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
ஆனால், மக்கள் ரஜினிகாந்த்தை அப்படித்தான் பார்க்க விரும்புகிறார்கள். ஸ்லோமோஷன் இல்லாமல் சினிமாவில் அவர் இருக்க முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. படத்தின் பாதியில் எதுவும் செய்யாமல் அவர் மெதுவாக நடப்பதைப் பார்ப்பது உங்களுக்கு பிரச்சனையில்லை. இது ஒரு கதாபாத்திரத்தின் ஆழத்திலிருந்து வரவேண்டிய அவசியமில்லை. ஒரு ஸ்டார் வழக்கமான கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, அது ஏமாற்றத்தை அளிக்கும். ரசிகர்கள் அவரை கடவுளாகவே பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் பற்றிய ராம்கோபால் விமர்சனம் ரஜினி ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.