பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் | தமிழில் ரீமேக் ஆகும் ஸ்ரீ லீலாவின் 'கிஸ்' | ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' |
ஸ்ரீ லீலா நடிப்பில் 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் வரை ஓடி வெற்றிப் பெற்ற படம் 'கிஸ்'. இந்தப் படம் தற்போது தமிழில் 'கிஸ் மீ இடியட்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதில் கன்னடத்தில் நடித்த வீராட், ஸ்ரீலீலா ஆகியோரே இதிலும் நடிக்கின்றனர். கூடவே ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி என இன்னும் ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார், பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார்.
கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய ஏ. பி. அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார். ஸ்ரீ லீலா தற்போது 'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார்.
படத்தின் நாயகி லீலா ஒரு ஆர்க்கிடெக்ட். அவர் ஒரு பணக்காரர் மகனான ஹீரோவின் காரை சேதப்படுத்தி விடுகிறார். அந்த சேதத்திற்கான இழப்பீட்டை அவரால் கொடுக்க முடியவில்லை. இதனால் எனது வீட்டில் 72 நாட்கள் வேலை செய்ய வேண்டும் அல்லது எனக்கு இரண்டு முத்தம் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் ஹீரோ.
முத்தம் கொடுக்க விரும்பாத நாயகி 72 நாட்கள் நாயகனின் வீட்டில் வேலை செய்ய ஒப்புக்கொள்கிறார். அந்த 72 நாட்களில் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.