ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் |

ஹாலிவுட் ஆக்சன் ஹீரோ டாம் குரூஸ் நடித்துள்ள படம் “மிஷன் இம்பாசிபிள்: தி பைனல் ரெகர்னிங்”. உலக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இத்திரைப்படம், மிஷன் இம்பாசிபிள் தொடரின் எட்டாவது மற்றும் இறுதி பகுதியாகும். டாம் குரூஸ், ஹெய்லி அட்வெல், சைமன் பெக், வானெஸா கெர்பி, ஹென்றி செர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுமார் 400 மில்லியன் செலவில் உருவான இந்த திரைப்படம், தற்போது வரை இந்த தொடரில் மிக அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான படமாகும். கிரிஸ்டோபர் மெக்வாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படம் இந்தியாவில் மே 17 அன்று வெளியாகும் என்றும் மற்ற நாடுகளில் மே 23ம் தேதி வெளியாகும் என்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது.