செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் நாக சைதன்யா. சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த ‛தண்டேல்' படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது தனது 24 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தேவ் கட்டா இயக்கும் மாயசபா என்ற அரசியல் கலந்த வெப்சீரிஸில் நாக சைதன்யா நடிப்பதாக சில தினங்களாக செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் இந்த தகவலில் உண்மையில்லை, இந்த படத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நாக சைதன்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாக சைதன்யா தற்போது கார்த்திக் வர்மா இயக்கத்தில் தனது 24வது படத்தில் நடிக்கிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் மர்மங்கள் கலந்த சஸ்பென்ஸ் நிறைந்த திரில்லர் படமாக உருவாகிறது. இதை பி.வி.எஸ்.என். பிரசாத் சுகுமார் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படம் பற்றிய முன்னோட்ட வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.