சமுத்திரக்கனிக்கு இயக்குனர் பிரியதர்ஷன் சொன்ன அறிவுரை | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அறிமுகப் படத்தின் பெயர் 'சிக்மா' | நகை கடத்தல் நடிகையின் கூட்டாளி நடிகருக்கு சிறையில் சொகுசு வசதி ; வெளியான அதிர்ச்சி வீடியோ | எதிர்பார்த்த 'வியூஸ்கள்' பெறாத 'தளபதி கச்சேரி' | ஏ.ஆர்,ரஹ்மான் லைவ் கான்சர்ட்டில் பங்கேற்ற ராம்சரண்-ஜான்வி கபூர் | 'துள்ளுவதோ இளமை' புகழ் அபிநய் காலமானார் : இறுதிச்சடங்கு செய்வதற்கு கூட ஆள் இல்லை | சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? |

ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ். சில்வர்ஸ்டர் ஸ்டோலன், அர்னால்டு சோர்ந்து விட்ட நிலையிலும் தற்போதும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர். 'மிஷன் இம்பாசிபிள்' படத்தின் அடுத்தடுத்து பாகங்களில் தற்போது நடித்து வருகிறார். உச்சகட்டமாக சர்வதேச வின்வெளி நிலையத்தில் விரைவில் படப்பிடிப்பு நடத்த இருக்கிறார்.
டாம் குரூஸ் ஆக்ஷன் படங்களில் நடிப்பதால் அவருக்கு ஆஸ்கர் விருது எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் திரைத்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக அவருக்கு கெளரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்பு அறிவித்து உள்ளது. டாம் குரூஸ் இதுவரை நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




