என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்க்கும் அளவிலான படமாக இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதனிடையே, தனது கனவுப்படமான 'மகாபாரதம்' பற்றிய அப்டேட் ஒன்றை சமீபத்தில் நடந்த 'ஹிட் 3' பட விழாவில் தெரிவித்திருந்தார். 'மகாபாரதம்' படத்தில் நானி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி என்று கூறியிருந்தார். அதையடுத்து 'மகாபாரதம்' பற்றிய சில செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
அப்படத்தை 10 பாகங்களாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டிருந்தார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தை மூன்று பாகங்களாக மட்டுமே உருவாக்க உள்ளோம் என ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். படத்திற்கான திரைக்கதை வடிவத்தை அவர்தான் எழுதி வருகிறார்.
மகேஷ்பாபு நடிக்கும் படத்தை எடுத்து முடித்த பின் 'மகாபாரதம்' படத்தின் வேலைகளில் ராஜமவுலி இறங்குவார் என்றும் தெரிகிறது.