என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

வீண் விளம்பரங்களுக்காக பிரபலங்கள் மீது புகார் கொடுக்கும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீதிமன்றம் இது போன்றவர்களுக்கு அபராதம் விதித்தாலும் புகழ் போதை இவர்களுக்கு குறைந்த பாடில்லை. தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் விஷயத்திலும் அப்படித்தான் நடந்துள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. அதை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அல்லு அர்ஜுன். அப்படி மும்பையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார்.
அப்போது அவரது ரசிகர்கள் குறித்து பெருமையுடன் அவர் பேசும்போது, “எனக்கு ரசிகர்கள் இல்லை. ஆனால் நான் ஒரு ஆர்மி வைத்திருக்கிறேன். என்னுடைய ரசிகர்களை நான் ரொம்பவே நேசிக்கிறேன். ஒரு குடும்பம் போல அவர்கள் எப்போதுமே எனக்காக நிற்கிறார்கள். என்னை கொண்டாடுகிறார்கள். ஒரு ஆர்மியைப் போல.. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்களை பெருமைப்படுத்துவேன்” என்று கூறினார்.
ரசிகர்களை ஆர்மியுடன் ஒப்பிட்டு இவர் எப்படி கூறலாம், ஆர்மி என்கிற வார்த்தையை இவர் பயன்படுத்தியது தவறு என்று மும்பையில் இவர் பேசிய பேச்சுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரீன் பீஸ் சுற்றுப்புற சூழல் மற்றும் நீர் மேலாண்மை அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் சீனிவாச கவுடா என்பவர் ஹைதராபாத்தில் உள்ள ஜவகர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் அல்லு அர்ஜுன் மீது புகார் அளித்துள்ளார். ரசிகர்கள் தனக்கு பக்கபலமாக படை வீரர்கள் போல இருக்கிறார்கள் என்பதை குறிப்பிடும் விதமாக ஆர்மி என்கிற பெயரை பயன்படுத்தியதற்கு கூட புகார் அளிப்பதா என அவரது ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.