நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்குப் படமான 'புஷ்பா 2' டிசம்பர் 5ம் தேதியன்று பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கானா மாநிலத்திற்கான கட்டணத் தொகைக்கான அரசாணையை அம்மாநில அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி டிசம்பர் 4ம் தேதிக்கான பிரிமியர் காட்சிகளுக்கான கட்டணத்தை ரூ.800 என நிர்ணயித்துள்ளார்கள்.
படம் வெளியாகும் தினமான டிசம்பர் 5ம் தேதிக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கும், டிசம்பர் 6 மற்றும் 7ம் தேதிக்கான இரண்டு கூடுதல் காட்சிகளுக்கும் அனுமதி அளித்துள்ளார்கள்.
சிங்கிள் தியேட்டர்களில் டிசம்பர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.150ம், 9ம் தேதி முதல் 16ம் தேதிவரை ரூ.105ம், 17ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை ரூ.20 உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை ரூ.200ம், 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை ரூ.150ம், 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை ரூ.50ம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம். அவற்றிற்கான ஜிஎஸ்டியும் தனி.
தெலுங்கானா அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், ஆந்திர மாநில அரசு என்ன அரசாணை வெளியிடப் போகிறது என திரையுலகினர் காத்திருக்கிறார்கள். ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலின் போது அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் இடையிலான மறைமுகமான மோதல் ஏற்பட்டு, சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.