2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ‛கேம் சேஞ்சர்' படத்தில் நடித்து முடித்து விட்டார் ராம்சரண். இந்த படம் வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இன்னொரு பக்கம் தனது அடுத்த படமாக தெலுங்கு இளம் இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்க துவங்கி விட்டார் ராம்சரண். இந்த இயக்குனர் தான் விஜய் சேதுபதியை வைத்து தெலுங்கில் ‛உப்பென்னா' என்கிற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். அந்த படத்தில் நடிகை கிர்த்தி ஷெட்டியையும் அறிமுகப்படுத்தியவர். இந்த படத்தில் ராம்சரண் ஜோடியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார். தேவரா படத்தை தொடர்ந்து இவர் தெலுங்கில் நடிக்கும் இரண்டாவது படம் இது.
கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பாலிவுட் நடிகர் திவ்யேந்த் சர்மா என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். பாலிவுட்டில் கடந்த 15 வருடங்களாக குறிப்பிடத்தக்க நடிகராக அறியப்படும் இவர், இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் நுழைகிறார். இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவ-22 முதல் துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.