நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? |
சமீபத்தில் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக கங்குவா திரைப்படம் வெளியானது. படத்தின் கதை அம்சம் ரொம்பவே சுமாராக இருந்தது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும் பலரும் ஒருமித்த குரலில் கூறியது இந்த படத்தில் பின்னணி இசை என்கிற பெயரில் படம் முழுவதும் சத்தம் இருந்து கொண்டே இருந்தது. எப்போதாவது சத்தம் இல்லாமல் இருந்தால் அது தான் எங்களுக்கு ரிலாக்ஸ் என தோன்றியது என்று பலரும் கூறும் அளவிற்கு பின்னணி இசையிலும் இசை கோர்ப்பிலும் அதிக அளவிலான சத்தம் ரசிகர்களை மிகவும் துன்புறுத்தி விட்டது என்றே உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.
ஒரு பக்கம் அவரது இசையமைப்பு அல்லது தவறான ஒலிக்கலவை அல்லது திரையரங்குகளில் ஒலியை சரியாக டியூன் செய்யாதது என மாற்றி மாற்றி இதற்கு காரணம் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது புஷ்பா 2 படத்தின் ஒலிக்கலவை பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த படத்திற்கும் தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருக்கிறார். அதேசமயம் இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட இன்னும் ஒரு சிலரும் தங்களது பங்களிப்பை இதில் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 வெளியாகும்போது கங்குவா படத்திற்கு கிடைத்தது போன்ற எதிர்மறை விமர்சனங்கள் இதன் இசைக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். “புஷ்பா 2 டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. உங்களது திரையரங்கில் ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர்களை முறையாக இப்போதே டெஸ்ட் செய்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று ரசூல் பூக்குட்டி திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.