Advertisement

சிறப்புச்செய்திகள்

விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து | மம்முட்டி, மோகன்லால் இணையும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | 30 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா ஜப்பான் பயணம் | பிளாஷ்பேக்: 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீமேக் ஆன தெலுங்கு படம் | மொபைல் எண் விவகாரம் : 'அமரன்' குழுவுக்கு மாணவர் நோட்டீஸ் | 'ஏஞ்சல்' பட விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக்: திடீர் வில்லன் ஆன எம்.ஜி.ஆர் | அமராவதியில் 'கேம் சேஞ்சர்' விழா : பவன் கல்யாண் வருவாரா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒன்று கூடும் நடிகைகள் ; நயன்தாராவுக்கு ஆதரவாகவா ? இல்லை தனுஷுக்கு எதிராகவா?

18 நவ, 2024 - 01:03 IST
எழுத்தின் அளவு:
Actresses-who-come-together;-In-favor-of-Nayanthara-No-against-Dhanush

நயன்தாராவின் டாக்குமென்ட்ரி படத்தில் அவர் நடித்திருந்த நானும் ரௌடி தான் படத்தின் கிளிப்பிங்குகளை பயன்படுத்த அதன் தயாரிப்பாளர் தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டார். இந்த படத்தின் தயாரிப்பு சமயத்தில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் மூலம் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தான் அதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது இந்த படத்தில் தான் என்பதால் அவர் நானும் ரௌடி தான் படத்தின் சில காட்சிகளை தனது டாக்குமென்டரி படத்தில் இடம்பெற வேண்டும் விரும்பினார்.

தனுஷ் கடைசி வரை அதற்கு செவி சாய்க்க மறுத்ததால் தன்னை டார்கெட் வைத்து வீழ்த்த தனுஷ் முயற்சிக்கிறார் என்று மூன்று பக்கம் அறிக்கை மூலம் மிக பலமான குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார் நயன்தாரா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் சரி திரையுலகினரிடமும் சரி ஆதரவு, எதிர்ப்பு என இருவருக்குமே சமமான நிலைப்பாடு எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் நயன்தாராவின் இந்த அறிக்கைக்கு மலையாள நடிகைகளான பார்வதி, ஐஸ்வர்ய லட்சுமி, நஸ்ரியா உள்ளிட்ட சில நடிகைகள் லைக் போட்டு தங்களது ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகைகளின் பிரச்னைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பார்வதி இந்த அறிக்கையை தன் பங்கிற்கு பகிர்ந்து கொண்டும் உள்ளார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இப்படி வெகு வேகமாக நயன்தாராவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்த இந்த நடிகைகள் எல்லோருமே தனுஷுடன் ஒவ்வொரு படத்தில் இணைந்து நடித்தவர்கள் தான். மரியான் படத்தில் பார்வதி, நையாண்டி படத்தில் நஸ்ரியா, ஜெகமே தந்திரம் படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி என ஆளுக்கு ஒரு படம் தனுஷுடன் நடித்துள்ளனர். இதில் நையாண்டி படத்தில் திடீரென கடைசி கட்ட படப்பிடிப்பிலிருந்து நஸ்ரியா சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பி போய்விட்டார் என்றும் அவர் புரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட வர மறுக்கிறார் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. அதுமட்டுமல்ல மரியான் படத்தில் கூட தனுஷுடன் இணைந்து மிக நெருக்கமான காட்சிகளில் நடிக்க வேண்டிய சூழல் பார்வதிக்கும் ஏற்பட்டது.

அந்த வகையில் சம்பந்தப்பட்ட இந்த நடிகைகள், நயன்தாரா தங்களது சக நடிகை என்பதால் மட்டும் அதுவும் தங்கள் ஊரை சேர்ந்தவர் என்கிற பாசத்தால் மட்டும் இந்த ஆதரவை வழங்கியுள்ளார்களா ? இல்லை, தனுஷ் படங்களில் நடித்த போது அவர் மூலம் ஏதாவது கசப்பான அனுபவங்களை சந்தித்தார்களா ? அதன் வெளிப்பாடாகத்தான் நயன்தாராவிற்கு தங்களது ஆதரவை வழங்குகிறார்களா ? இதன் மூலம் தனுஷுக்கு தங்களது எதிர்ப்பை காட்ட நினைக்கிறார்களா என்றும் புதிய ஒரு விவாதம் தற்போது துவங்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
போஸ்டர் மூலம் தனுஷை சீண்டுகிறாரா நயன்தாரா?போஸ்டர் மூலம் தனுஷை சீண்டுகிறாரா ... ''நான் மட்டும் தான் காதலித்தேனா?; ஆண்களை ஏன் கேட்பதில்லை?'': முந்தைய காதல் பற்றி நயன்தாரா ஓபன் டாக் ''நான் மட்டும் தான் காதலித்தேனா?; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

sugumar s - CHENNAI,இந்தியா
19 நவ, 2024 - 12:11 Report Abuse
sugumar s when nayan wants to make money on her marriage then dhanush is right in asking for compensation
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
19 நவ, 2024 - 12:11 Report Abuse
Easwar Kamal நம்மளை ஒருத்தனும் ஒன்னும் பண்ண முடியாதுனு ஆடுறதுக்கு ரௌண்கட்டி அடிச்சாதான் இவனுங்க திருந்துவனுங்க.
Rate this:
maruthu pandi - Oru peru vendaam nanbaa,இந்தியா
19 நவ, 2024 - 06:11Report Abuse
maruthu pandiமலையாளி பெண்களை பற்றி நல்ல தெரியுமா ? அதும் சினிமா நடிகைங்க ? மோசமானவங்க .....
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
18 நவ, 2024 - 02:11 Report Abuse
தமிழன் நயன்தாராவிற்கு வக்காலத்து வாங்கிய நடிகைகள் அனைவரும் மலையாள நடிகைகள் நயன்தாராவும் மலையாளிதான் இதில் எந்த ஆச்சர்யமும் இல்லை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in