கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
கடந்த இரண்டு நாட்களாகவே தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே நடந்து வந்த பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்து மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. நயன்தாராவின் திருமண வீடியோ இன்று டாக்குமென்டரி படமாக நெட் பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. இதில் நானும் ரவுடிதான் படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் தனுஷை அணுகியதாகவும் இரண்டு வருடமாக அதை தள்ளி போட்டு வந்த தனுஷ், அனுமதி மறுத்துவிட்டதாகவும் நயன்தாரா பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அது மட்டுமல்ல தனுஷ் பற்றி தனிப்பட்ட முறையிலும் பல விமர்சனங்களை கடுமையாக முன் வைத்தார் நயன்தாரா.
இந்த நிலையில் இது போதாது என்று அடுத்ததாக போஸ்டர் மூலம் இன்னொரு தாக்குதலையும் தொடுத்துள்ளார் நயன்தாரா. அவர் பிறந்தநாளான இன்று அவர் நடிக்கும் 'ராக்காயி' என்கிற படத்தின் டைட்டில் போஸ்டர் என்று வெளியாகி உள்ளது. செந்தில் நல்லசாமி என்பவர் இயக்கும் இந்த படத்தின் போஸ்டர் இன்று வெளியாவதை அறிவிக்கும் விதமாக நேற்று அதற்கு ஒரு புரோமோ போஸ்டர் ஒன்றும் வெளியானது அதில் நயன்தாரா அமர்ந்திருப்பது போன்றும் அந்த போஸ்டரில் 'அவள் போரை அறிவித்து விட்டாள்' என்கிற கேப்சன் வார்த்தைகளும் இடம்பெற்று இருந்தன. அது மட்டுமல்ல அந்த போஸ்டரை பகிர்ந்து கொண்ட நயன்தாரா 'மிருகங்களுக்கு இடையேயான போர்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
படத்தின் கதைக்கும் அவரது கதாபாத்திரத்திற்கும் இவை பொருத்தமான வார்த்தைகள் தான் என்றாலும் தனுஷுக்கும் அவருக்கும் இடையான இந்த பிரச்சனை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இப்படி ஒரு போஸ்டர் மூலம் நயன்தாரா எரிகிற தீயில் தேவையில்லாமல் எண்ணெயை தான் ஊற்றி உள்ளார் என்றே தெரிகிறது