மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
சமூக வலைத்தளங்களின் அசுர வளர்ச்சியால் இந்திய திரைப்படத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களது சமூக வலைத்தளங்களில் அதிக பாலோயர்களை வைத்துள்ள சிலர் திரைப்படத் தயாரிப்பாளர்களை விமர்சனங்கள் என்ற பெயரில் அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில சங்கங்கள் இது குறித்து நீதிமன்றத்தை நாடும் நிலை வரை ஏற்பட்டது. பாரம்பரியம் மிக்க ஊடக நிறுவனங்கள் இருந்தவரையில் இப்படிப்பட்ட அச்சுறுத்தல் திரையுலகில் வந்ததில்லை. ஆனால், சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு பலரும் 'பிளாக்மெயில்' செய்யும் விதமாக நடந்து கொள்வதாகவும் பலர் கூறி வருகிறார்கள்.
இது குறித்து, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில் - IFTPC, நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
“இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கவுன்சில் (IFTPC), இந்தியாவில் 375-க்கும் மேற்பட்ட முன்னணி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதன்மையான அமைப்பு. கடந்த சில ஆண்டுகளாக சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்களில் சிலர் திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் பிற காட்சி-ஒலி உள்ளடக்கங்களுக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் இழிவான விமர்சனங்கள் அல்லது எதிர்வினை வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி, தயாரிப்பாளர்களிடமிருந்து பணம் கோரும் கொள்ளையடிக்கும் நடைமுறைகளில் ஈடுபடுவதை கவனித்துள்ளது.
இந்தக் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், இந்த செல்வாக்கு செலுத்துபவர்கள் ஒரு திட்டத்தின் வரவேற்பு மற்றும் வணிக வெற்றியை வேண்டுமென்றே பாழாக்குவதற்காக இலக்கு வைத்து பிரச்சாரங்களைத் தொடங்குவதாக மிரட்டுகின்றனர்.
IFTPC மற்றும் அதன் உறுப்பினர்கள் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இல்லை. உண்மையான, ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கின்றனர். ஆனால், சில நேர்மையற்ற நபர்களின் இந்த புரையோடடிய நடைமுறைகள், முறையான விமர்சனத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவை மற்றும் இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையின் படைப்பு மற்றும் பொருளாதார நலனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
எனவே, இந்த புரையோடிய நடைமுறைகளுக்கு விரைவாகவும் உறுதியாகவும் முடிவு கட்டுவதற்கு, சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களின் கீழ் உள்ள அனைத்து சட்ட வழிகளையும் ஆராய, முதன்மையான சட்ட ஆலோசகர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற IFTPC முடிவு செய்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய அளவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இப்படியான சில சமூக வலைத்தள கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க முடியும் என சில மூத்த தயாரிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.