டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, புலி, வேதாளம், லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் ரஜினியின் மகளாக பிரீத்தி என்ற ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது பெற்றோர் குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார்.
அதில், ''கமல்ஹாசன், சரிகாவின் மகளாக இருப்பது எனக்கு பெருமை தான். அதே சமயம் என்னை அனைவருமே கமலின் மகள் என்றுதான் கூறுகிறார்கள். என் தந்தையின் புகழ் சில நேரங்களில் எனக்கு சுமையாக உள்ளது. அதனால் எனக்கு என்று ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறேன்,'' என்று கூறியிருக்கும் ஸ்ருதிஹாசன், ''எனது பெற்றோர் பிரிந்த பிறகு அம்மாவுடன் நானும் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் பிடிவாதமாக பிரிந்து வாழ்வது வருவது என்னையும் எனது தங்கை அக்ஷராவையும் பெரிய அளவில் பாதித்துள்ளது,'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன்.




