‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை சாய் பல்லவி கடந்த 10 வருடங்களில் அந்த புகழால் எத்தனையோ படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால் தனக்கு பிடித்த படங்களை மட்டுமே தேர்வு செய்து குறைவான எண்ணிக்கையிலேயே படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்று விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் என்ஜிகே படத்தில் இருந்து தான் விலக நினைத்ததையும் அதை தனுஷ் தடுத்ததையும் பற்றி கூறியுள்ளார் சாய்பல்லவி. இதுபற்றி அவர் கூறும்போது, “நான் செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தபோது துவக்க நாட்களில் ரொம்பவே அன் ஈசியாக உணர்ந்தேன். காரணம் செல்வா சார் காட்சிகளை படமாக்கியதும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா இல்லையா என்பது பற்றி எந்த கருத்துமே சொல்ல மாட்டார். இதனால் சில நாட்களில் அந்த படத்தில் இருந்து வெளியேறி விடலாமா என்று கூட நினைத்தேன்.
அப்போது தனுஷ் என்னிடம் என் ஜி கே படப்பிடிப்பு எப்படி போகிறது இன்று விசாரித்தபோது அவரிடம் இந்த விஷயத்தை கூறினேன். அவர் உடனே இதற்கெல்லாம் வருத்தப்பட வேண்டாம் செல்வா அண்ணன் நம்மை இப்படித்தான் டெஸ்ட் பண்ணுவார். நீ கவலைப்படாமல் நடி” என்று கூறினார். அதன் பிறகு அந்த படத்தில் பாசிட்டிவ் அணுகுமுறையுடன் நடிக்க துவங்கினேன். நடிகர் சூர்யாவும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார்” என்று கூறியுள்ளார் சாய்பல்லவி.