சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாளத்தில்
'தள்ளுமாலா', 'உண்டா', 'ஒன்', 'ஆப்ரேஷன் ஜாவா', 'சாவேர்' உள்ளிட்ட பல்வேறு
படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்தவர் நிஷாத் யூசுப் (வயது 43). இதில்
2022ல் தள்ளுமாலா படத்திற்காக கேரள அரசின் சிறந்த எடிட்டருக்கான
விருதினையும் வென்றிருந்தார். தற்போது தயாராகி வரும் மோகன்லால் மற்றும்
மம்முட்டி படங்களுக்கும் எடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
அதேபோல்,
தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து, நவம்பர் 14ல்
வெளியாகவுள்ள 'கங்குவா' படத்திற்கும் எடிட்டராக இருந்துள்ளார். சூர்யா,
அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கப்போகும் 'சூர்யா 45'
படத்திற்கும் இவர் தான் எடிட்டர். இந்த நிலையில், கொச்சி பனம்பில்லி நகரில்
உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (அக்.,30) அதிகாலை 2 மணியளவில் இறந்து கிடந்தார். அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது என்பது தெரியாத நிலையில் தற்போது முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்கொலை
நிஷாத் யூசப், குடும்ப பிரச்னை காரணமாக அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
![]() |