சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

மாடலிங் துறையில் முன்னணியில் இருப்பவர் மோனிஷா சென். பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவர் புதிய தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமா இன்று அசைக்க முடியாத மிகப்பெரிய இடத்தில் உள்ளது. பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் மற்றும் காஜல் அகர்வால், தமன்னா பாட்டியா, ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகளை என இவர்களைப் பல ஆண்டுகளாக ரசிகர்களைப் போலவே நானும் பார்த்து ரசித்து வருகிறேன்.
சினிமாவில் அவர்களின் அற்புதமான நடிப்பு, அர்ப்பணிப்பு, கமர்ஷியல் விஷயங்கள் என இவை அனைத்தும் தென்னிந்திய சினிமாவை பெருமை கொள்ள செய்கிறது. இந்த சிறப்புகள் காரணமாகவே தென்னிந்திய சினிமாவில் நானும் அடியெடுத்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இது எனக்கான நேரம். படத்தை பற்றிய தகவல்களை தயாரிப்பு நிறுவனம் முறைப்படி வெளியிடும். ஆர்வம் காரணமாக எனது ரசிகர்களுக்கு நான் இந்த தகவலை முன்னரே சொல்கிறேன். என்கிறார், மோனிஷா.




